ஸ்ரீல பிரபுபாதா பற்றி பிரதமர் வழங்கிய உரை

இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியர் தெய்வத்திரு.அ.ச.பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா அவர்களின் 125வது வியாச பூஜை விழா ஆகஸ்ட் 31 அன்று உலகம் முழுவதும் வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.

நம் இந்திய அரசு, ஸ்ரீலபிரபுபாதா அவர்கள் மக்களுக்கு ஆற்றிய அளப்பெரும் பங்களிப்பை போற்றி நினைவு கூறும் வகையில் ஸ்ரீலபிரபுபாதாவின் திருவுருவம் பொறித்த ரூ.125 நாணயத்தை வெளியிட்டது. 

இந்த நாணய வெளியீட்டு விழா புதுதில்லியில் செப்டம்பர் 1ம் தேதி வீடியோ கான்பிரன்சிங் நிகழ்ச்சி மூலம் நடைபெற்றது. உலகளாவிய இஸ்கான் கோயில்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர். ஸ்ரீலபிரபுபாதாவின் நேரடி சீடரும், இஸ்கான் நிர்வாக அமைப்பு தலைவருமான தவத்திரு.கோபால கிருஷ்ண ஸ்வாமி அவர்கள் தலைமை தாங்கினார். விழாவின் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர் திரு.கிஷன் ரெட்டி அவர்கள் உட்பட பல முக்கிய அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் மோடி அவர்கள் ஸ்ரீலபிரபுபாதா திருவுருவம் பொறித்த ரூ.125 நாணயத்தை வெளியீட்டு சிறப்புரை ஆற்றினார்.