மூன்று முக்கிய மந்திரங்கள்
1. ‘ஶ்ரீல பிரபுபாதா’ ப்ரணாம மந்திரம்
நம ஓம் விஷ்ணு-பாதாய க்ருஷ்ண-ப்ரஷ்டாய பூ-தலே
ஶ்ரீமதே பக்திவேதாந்த-ஸ்வாமின் இதி நாமினே
நமஸ்தே ஸாரஸ்வதே தேவே கௌர-வாணீ-ப்ரசாரிணே
நிர்விசேஷ-சூன்யவாதி-பாஷ்சாத்ய-தேச-தாரிணே
2. பஞ்ச-தத்வ மந்திரம்
ஜெய ஶ்ரீ-க்ருஷ்ண-சைதன்ய பிரபு நித்யானந்த
ஶ்ரீ-அத்வைத கதாதர ஶ்ரீவாஸாதி-கௌர-பக்த-விருந்த
3. ‘ஹரே கிருஷ்ண’ மஹாமந்திரம்
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
பொருள்:
- நான் எனது மரியாதைக்குரிய நமஸ்காரங்களை தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த ஸ்வாமி ஶ்ரீல பிரபுபாதா அவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். ஶ்ரீலபிரபுபாதா, பகவான் ஶ்ரீகிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவரும், கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சரணடைந்தவரும் ஆவார்.
ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர் அவர்களின் சேவகரும், ஆன்மீக குருவுமான தங்களுக்கு எனது மரியாதைக்குரிய நமஸ்காரங்களை நான் சமர்ப்பிக்கின்றேன். மாயாவாதமும், சூன்யவாதமும் நிறைந்த மேலைநாடுகளில் ஶ்ரீசைதன்ய மஹாபிரபுவின் போதனைகளை நீங்கள் கருணையோடு பிரச்சாரம் செய்து அவர்களை காப்பாற்றுகிறீர்கள்.
2. ஶ்ரீசைதன்ய மஹாபிரபு எப்போதும் அவரது சகாக்களால் சூழப்பட்டிருக்கிறார். அவரது விரிவாக்கமான ஶ்ரீநித்யானந்த பிரபு, அவரது அவதாரமான ஶ்ரீஅத்வைத பிரபு, அவரது ஆன்மீக சக்தியான ஶ்ரீகதாதார பிரபு, அவருடைய நடுநிலைச் சக்தியான ஶ்ரீவாஸ பிரபு ஆகியோருடன் நடுமத்தியில் ஶ்ரீசைதன்ய மஹாபிரபு முழுமுதற்கடவுளாக திகழ்கிறார். ஆகவே ஶ்ரீசைதன்ய மஹாபிரபுவிற்குரிய வந்தனங்களை மேற்கூறிய பஞ்சதத்வ மந்திரத்தை கூறுவதன் மூலம் பூரணமடைகிறது.
ஶ்ரீசைதன்ய மஹாபிரபு தான், ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை எல்லா மக்களுக்கும் உச்சரிக்குமாறு எடுத்து வழங்கினார். ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை ஜபம் செய்வதற்கு முன்னால், இந்த பஞ்ச தத்வ மந்திரத்தை ஒரு முறை உச்சரித்துவிட்டு
பிறகு ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
3. பதினாறு வார்த்தைகள் அடங்கிய இந்த ஹரே கிருஷ்ண மந்திரம், ‘மஹாமந்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த மஹாமந்திரம் ‘கலிசந்தரண உபநிஷத்தில்’ குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கலியுகத்தில் மக்கள் நற்கதியடைய, ஹரிநாமத்தை தவிர வேறு வழியில்லை என்று வேத சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.‘மன்’ என்றால் மனம் என்றும், ‘திரா’ என்றால் விடுவிப்பது என்றும் பொருள்.
சாதாரணமாக ஒரு மந்திரம், ஒரு குறிப்பிட்ட துன்பத்திலிருந்து மனதை விடுவிக்கும். ஆனால் ‘மஹாமந்திரம்’ என்றால், எல்லா வகையான துன்பங்களில் இருந்தும் மனதை விடுவிக்கும் சக்தி வாய்ந்ததாகும்.
ஹரே கிருஷ்ணா
